மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கழுதையை அடித்து துன்புறுத்திய இளைஞர்.. குப்புற படுக்கப்போட்டு கடித்து குதறி மாஸ் சம்பவம்.!
தன்வினை தன்னைச்சுடும் என்பது முதுமொழி.. தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனையை உடனே பெற்றாகவேண்டும் என்பதே இதன் அர்த்தம். இதனை உறுதி செய்ய பல சம்பவங்கள் நடக்கிறது. ஆனாலும், தவறுகள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகிறது.
இந்த வீடியோவில், இளைஞர் கழுதையை சரமாரியாக தாக்குகிறார். அந்த கழுதையோ அடிவாங்கியவாறு கதறும் நிலையில், இளைஞர் ஈவு இரக்கமின்றி அதனை தொடர்ந்து காயப்படுத்துகிறார். கழுத்தையும் அடிவாங்கியவாறு இருக்க, இளைஞர் அதன் முதுகில் இருக்கிறார். தனக்கான சமயம் வந்ததை போல உணர்ந்த கழுத்தை, இளைஞரின் காலை கவ்விக்கொண்டது.
இளைஞர் கால் வலி பொறுக்க இயலாமல் கதறவே, கீழே விழுந்த இளைஞரை கழுதை கடித்து குதறுகிறது. இதுதொடர்பான வீடியோ எங்கு? பதிவு செய்யப்பட்டது என்ற விபரம் இல்லை. தன்வினை தன்னையே சுடும் என்பதற்கு உதாரணமாய் வைரலாகி வருகிறது.