மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உறங்கிக் கொண்டிருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை... இளம் பெண் புகார்... காவல்துறை நடவடிக்கை!
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூரில் பெண்களுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை காவல்துறை கைது செய்திருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் அருகே உள்ள அகரம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி வயது 29. இவரது கணவர் சக்தி குமார் தனியார் கம்பெனி ஒன்றில் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். பரமேஸ்வரி கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்று இருக்கின்றனர். அப்போது கணவர் சக்தி குமார் வெயிலின் காரணமாக வீட்டின் வெளியே உறங்கிக் கொண்டிருந்தார். பரமேஸ்வரி தனது பிள்ளைகளுடன் வீட்டில் உள்ளே கதவை பூட்டாமல் உறங்கி இருக்கிறார்.
அப்போது திடீரென யாரோ ஒருவர் அவரது தோள்பட்டை மற்றும் கைகளை அழுத்துவது போன்று இருந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பரமேஸ்வரி எழுந்து மின் விளக்கை போட்டு பார்த்த போது அதே தெருவை சார்ந்த கோவிந்தன் இவரிடம் பாலியல் சீண்டலில் ஏற்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த கோவிந்தன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை சம்பவம் தொடர்பாக பரமேஸ்வரி மற்றும் அவரது கணவர் சக்தி குமார் இருவரும் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோவிந்தனை கைது செய்து சிறையில் அடைத்தது.