வந்தது குட் நியூஸ்...!! டோல்கேட்களில் புதிய நடை முறை அறிமுகம்: இனி ஜாலிதான்..!!



A new procedure has been introduced to pay tollgate only for the distance traveled on national highways

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் தூரத்திற்கு மட்டும் டோல்கேட் கட்டணம் செலுத்த, புதிய நடைமுறை அறிமுக படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சராசரியாக 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு சுங்கச்சாவடி உள்ளது. இதில், வாகனங்களுக்கு ஏற்ப, நிர்ணயிக்கப்பட்ட தொகை தற்போது  வசூலிக்கப்பட்டு வருகிறது.

டோல்கேட்டில் கட்டணம் செலுத்த பாஸ்ட் டேக் முறை நடைமுறையில் உள்ளபோதும், டோல்கேடில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை தொடர்ந்து வருகிறது. இதை தவிர்க்கும் வகையில், புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

இதை முன்னிட்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியாக கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம், தானியங்கி முறையில் வாகனங்களின் நம்பர் பிளேட்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, பயணம் செய்த தொலைவு கணக்கிடப்பட உள்ளது.

பின்னர், சாலையில் பயணம் செய்த தூரத்தின் தொகை மட்டும் பாஸ்ட் டேக் மூலம் வசூலிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக, 29 கிலோ மீட்டர் நீளம் கொண்ட டெல்லி - குருகிராம் விரைவுச் சாலையில், இந்த புதிய நடைமுறை ஆறு மாதத்தில் செயல்பாட்டுக்கு வரும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.