ஓடும் ரயிலில் இருந்து பயணியை வெளியில் வீசிய ஊழியர்கள்: தண்ணீர் பாட்டில் விவகாரத்தில் விபரீதம்..!



A youth was attacked and thrown from a moving train by railway pantry staff over a dispute over buying a water bottle.

உத்தரப்பிரதேசம், மாநிலம் லலித்பூர் மாவட்டம்  லலித்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரவி ( 26) என்பவர் தனது சகோதரியுடன் பயணம் செய்தார். ரெயில் ஜிரோலி கிராமம் அருகே வந்தபோது, ​​தண்ணீர் பாட்டில் வாங்குவது மற்றும் பான் மசாலாவை துப்புவது தொடர்பாக அவருக்கும் பான்ட்ரி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரவியின் சகோதரி லலித்பூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளார். ஆனால், ரயில்வே பான்ட்ரி ஊழியர்கள் ரவியை அங்கு இறங்க விடாமல் தாக்கியுள்ளனர். இதன் பின்னர் ரயில் அங்கிருந்து கிளம்பிய பின்பு ஓடும் ரெயிலில் இருந்து தண்டவாளத்தில் தூக்கி வீசியுள்ளனர். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் அவரை அங்கிருந்து மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அவர், சிகிச்சைக்காக ஜான்சியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் ரவி நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி அளித்த புகாரின் அடிப்படையில் பான்ட்ரி ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

தண்ணீர் பாட்டில் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் ரயில்வே பான்ட்ரி ஊழியர்கள் இளைஞர் ஒருவரை தாக்கி ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.