திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
போதை ஆசாமியால்; பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தெரு நாய்...!! தெரு நாய்க்கு நேர்ந்த கொடூர சம்பவம்..!!
போதையில் இருந்த நபர் ஒருவர், தெரு நாயை பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் இந்திரபுரி நகரில் உள்ள ஜேஜே காலணியில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜேஜே காலணி பி பிளாக்கில் வசிக்கும் ராஜேஷ் என்பவர் இந்திரபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், கடந்த 28-ஆம் தேதி இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன்.
அப்போது, ஜேஜே காலணி பி பிளாக்கில் எனது வீட்டருகே நாய் ஊளையிடும் சத்தம் கேட்டது. எனவே சந்தேகமடைந்து அங்கு சென்று பார்த்தேன், அப்போது என் வீட்டிற்கு அருகே இருக்கும் வீட்டில் வசிக்கும் சதீஷ் என்பவர் அந்த நாயை பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்தார், என்று புகார் அளித்தார்.
மதுபோதையில் இருந்த சதீஷ் தெரு நாயை பாலியல் வன்கொடுமை செய்ததை ராஜேஷ் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். சதீஷ் மீது புகார் கொடுத்தபோது அந்த வீடியோவையும் அவர் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளார். வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் மதுபோதையில் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்த சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் ஹரி நகரில் இருக்கும் பூங்காவில் நாயிடம், ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த காணொளி, சமூகவலைதளத்தில் பரவியது. பூங்காவில் நடந்த சம்பவத்தில் குற்றவாளி யார் என்று தெரியவில்லை. மேலும், இன்னும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.