மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசுப்பள்ளியில் பகீர்.. தேர்வெழுதிய மாணவி மீது கழன்று விழுந்த மின்விசிறி.. மாணவி படுகாயம்..!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியின் மீது மின்விசிறி கழன்று விழுந்ததில், அவர் காயமடைந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள சத்யசாய் மாவட்டம் ஹேமாண்டி கிராமத்தில், அரசு பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. அப்போது தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியின், தலைக்குமேல் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி திடீரென கழன்று அவர் மேலே விழுந்துள்ளது.
இதனால் மாணவியின் கண்ணுக்கு கீழே மின்விசிறியின் இறக்கை பட்டு, அவர் காயமடைந்துள்ளார். இதனை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் சிகிச்சைக்கு பின் மாணவி மீண்டும் பொதுத் தேர்வை எழுத தொடங்கியுள்ளார்.
பின் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் விசாரணை செய்ததில், மின்விசிறி முறையாக பொருத்தப்படாத காரணத்தால், கழன்று விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விஷயம் தொடர்பாக மீண்டும் விசாரணை நடைபெறுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.