திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐய்யோ பிள்ளைங்கள காணோமே..! கதறிய பெற்றோர் காருக்குள் கிடந்த 3 சிறுமிகள்..! உயிர்பிழைக்க நடந்த போராட்டம்..!
பூட்டிய காருக்குள் மூன்று சிறுமிகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பாப்பன்னபாளையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த 6 வயது முதல் 8 வயது வயதுடைய பர்வீன், யாஸ்மின், சுல்தானா ஆகிய மூவரும் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் ஏறி விளையாடியுள்ளனர்.
ஏற்கனவே காரின் காண்ணாடி மூடப்பட்டிருந்தநிலையில் சிறுமிகள் காருக்குள் ஏறியதும் காரின் காதவு தானாக மூடியுள்ளது. இதில் மூன்று சிறுமிகளும் மூச்சுவிடமுடியாமல் காருக்குள் மாட்டிக்கொண்டனர். உயிர்பிழைப்பதற்காக மூவரும் காரின் காண்ணாடியை உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அது முடியாமல் போக ஒருகட்டத்தில் மூவரும் மூச்சு திணறி காருக்குலையே இறந்துகிடந்துள்ளனர்.
இதனிடையே குழந்தைகளை காணவில்லை என தேடிய பெற்றோர் இறுதியில் மூவரும் காருக்குள் சடலமாக கிடப்பதை கண்டு கதறியுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.