மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சிகிரெட் வேணும்" - அணையில் குதிப்பதாக கூப்பாடு போட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்..!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, கோகர்பம் அணையின் ஆபத்தான பகுதிக்கு வந்த நரேந்திரன் என்ற நபர் குதித்து தற்கொலை செய்வது போல பாவனைகளில் ஈடுபட்டார்.
இதனை கண்ட தேவஸ்தான அதிகாரிகள் அவரை அங்கிருந்து வரச்சொல்லி அறிவுறுத்திய நிலையில், அவர் தனக்கு சிகரெட் வேண்டும். என்னால் சிகரெட் குடிக்க முடியாமல் இருக்க முடியாது என்று கூறி அடாவடி செய்துள்ளார்.
மேலும் அணையில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர் அணையில் குதிக்க இருந்த நரேந்திரனை பத்திரமாக மீட்டு ஆலோசனை வழங்கி குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.