#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
400 வீடு புகுந்து, பகல் வேளையில் சித்துவேலை பார்த்து.., பெண்களுடன் உல்லாச விருந்து.. அதிரவைக்கும் திருடனின் வாக்குமூலம்.!
சித்தூர் மற்றும் திருப்பதி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு பெண்களுடன் அறையெடுத்து உல்லாசமாக இருந்து வந்த திருடன் தொடர்பான தகவலைகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர், திருப்பதியில் பூட்டிய வீட்டினை குறிவைத்து கும்பல் திருட்டு செயலை தொடர்ந்து வந்தது. இதுகுறித்த தொடர் புகார்கள் காவல் துறையினருக்கு குவிந்து வந்தது. இந்நிலையில், சித்தூர் காவல் ஆய்வாளர் நரசிம்ம ராஜு தலைமையிலான காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த வாலிபர் சந்தேகத்தின் கீழ் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார். விசாரணை செய்ததில், அவர் குண்டூரை சார்ந்த மகேஷ் (வயது 33) என்பது உறுதியானது. இவர் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர், திருப்பதி, விஜயவாடா, தெலிங்கானாவில் உள்ள ஐதராபாத் பகுதியில் பகல் வேளைகளில் வீடுகளை நோட்டமிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.
இந்த நகையை விற்பனை செய்து பணமாக மாற்றி, விடுதிகளில் அறையெடுத்து தங்கி பெண்களுடன் மதுபானம் அருந்தி உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளான். இவ்வாறாக மொத்தமாக 400-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கைதான மகேஷிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.