அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து ராணுவ மருத்துவமனை வெளியிட்ட புதிய தகவல்!
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் கடந்த 10 ஆம் தேதி உடல்நிலை மிக மோசமான நிலையில் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவரது மூளை ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமான நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
Former President Pranab Mukherjee continues to be in deep coma and on ventilator support. He is being treated for a lung infection and renal dysfunction. He is haemodynamically stable: Army Hospital (R&R), Delhi Cantt
— ANI (@ANI) August 27, 2020
(File pic) pic.twitter.com/5z4ObvJIyW
இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவ நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து ஆழ்ந்த கோமா மற்றும் வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார். அவர் நுரையீரல் தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளனர்.