தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஐ.ஐ.டி.,க்களில், பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம்: மத்திய அரசின் அறிவிப்பால் பட்டதாரிகள் மகிழ்ச்சி..!
ஐ.ஐ.டி.,க்களில், ஆசிரியர்களுக்கான பி.எட் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளதால், பட்டதாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 700 கல்வியியல் கல்லுாரிகள் உட்பட, நாடு முழுதும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், இளங்கலை பட்டப்படிப்பான பி.எட்., மற்றும் முதுகலை பட்டப்படிப்பான எம்.எட்., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. தமிழக கல்லுாரிகளுக்கு, தமிழக ஆசிரியர் மற்றும் கல்வியியல் பல்கலைகளில் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், பெரும்பாலான கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., படிப்புகளின் தரம் குறைவாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பி.எட்., கல்லுாரிகளும், பல்கலைகளும் தேசிய அளவிலான தர வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன. பல கல்வியியல் கல்லுாரிகளில் தகுதியான பேராசிரியர்கள், முதல்வர்கள் இல்லை. மேலும், மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கேற்காமல் இருக்க சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்த குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது, உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்களில், பி.எட்., படிப்பு தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், முதற்கட்டமாக சில ஐ.ஐ.டி.,க்களில் மட்டும் பி.எட்., சேர்க்கை நடத்தப்படும் என்றும், அடுத்த கல்வியாண்டில் அனைத்து ஐ.ஐ.டி.,க் களிலும் பி.எட்., சேர்க்கை நடத்தப்படும் என்றும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதனால், பட்டதாரிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.