ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நண்பருடன் சேர்ந்து காதலியை நாசம் செய்த பெங்களூரு இளைஞர்... காவல்துறை விசாரணை.!
கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் சேர்ந்து காதலியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது நண்பரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தம். இவரும் அப்பொழுதியைச் சார்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது காதலியை பார்க்கச் சென்ற புருஷோத்தம் அவருடைய செல்போனை எடுத்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து தனது செல்போனை திரும்ப கேட்டிருக்கிறார் காதலி.
அவரிடம் பெங்களூருவில் வந்து வாங்கிச் செல்லுமாறு கூறியிருக்கிறார் புருஷோத்தம். இதனை நம்பிய அவரது காதலியும் பெங்களூர் சென்றிருக்கிறார் பெங்களூர் பேருந்து நிலையத்திலிருந்து தனது காதலியை கிரிநகரில் உள்ள நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார் புருஷோத்தம். அங்கு வைத்து அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியில் மயங்கி இருக்கிறார் அவரது காதலி.
இதனைத் தொடர்ந்து அவரது ஆறைக்குள் நுழைந்த நண்பர் சேத்தன் என்பவரும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இது தொடர்பாக புருஷோத்தம் மற்றும் அவரது நண்பரை கைது செய்து சிறையிலடைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.