மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுவர்களை விரட்ட துப்பாக்கியால் சுட்ட அமைச்சரின் மகன்.. அடித்து உதைத்த கிராம மக்கள்.!
தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறார்களை விரட்ட துப்பாக்கியால் சுட்ட அமைச்சரின் மகனை உள்ளூர் மக்கள் வெளுத்துவிட்ட சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நாராயண் ஷா. இவரின் மகன் பப்லுகுமார். பப்லுகுமாரை சமீபத்தில் கும்பல் ஒன்று தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியானது.
இதுகுறித்து விசாரிக்கையில், பப்லு குமார் தனது பழத்தோட்டத்தில் இருக்கையில், அங்கு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தைகளை விரட்ட துப்பாக்கியால் சுட்டு மிரட்டியுள்ளார். இதனால் பதறிப்போன குழந்தைகள் வீட்டில் சென்று விஷயத்தை தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தைகள் தப்பி செல்ல முயற்சித்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஒரு குழந்தை உயிரிழந்தது, 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் வாசிகள் கும்பலாக சென்று அமைச்சரின் மகனை அடித்து உதைத்துள்ளனர். அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் பறித்து சென்றுள்ளனர். இதனையடுத்து, அங்கு பரபரப்பு சூழல் நிலவவே, பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கிராம மக்களிடம் இருந்த கைதுப்பாக்கியும் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
विधायक जी का रंगबाज़ बेटा...।
— Mukesh singh (@Mukesh_Journo) January 23, 2022
बिहार के पर्यटन मंत्री नारायण साह के बेटे पर बगीचे में खेल रहे बच्चों और महिलाओं को पीटने और उस पर गोली चलाने का आरोप है।
बाद में जनता दौड़ा दौड़ा कर इनका रंगदारी का भूत उतारा है । pic.twitter.com/uHAadHrmBr