அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
முதலாளி வீட்டிற்குள் நுழைய முயன்ற 4 அடி நீளமுள்ள விஷ நாகம்.! தடுத்து நிறுத்திய பூனையின் சிலிர்க்க வைக்கும் வீடியோ.!
முதலாளியின் வீட்டிற்குள் நுழைய முயன்ற நல்ல பாம்பை பூனை ஒன்று தடுத்து நிறுத்தி காவலுக்கு இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஒடிசாவின் தலைநகர் புவனேஷ்வரை சேர்ந்த சம்பத் குமார் பரிதா என்பவர் அவரது வீட்டில் சின்னு என்ற பூனையை வளர்த்து வந்துள்ளார். இந்தநிலையில் அவரது வீட்டின் பின்புறத்தில் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று வந்துள்ளது.
அந்த நல்ல பாம்பு தனது வீட்டின் உரிமையாளரின் வீட்டினுள் நுழைய முயற்சிப்பதை பார்த்த அந்த பூனை உடனடியாக வேகமெடுத்து வீட்டின் பின்புறத்திற்கு ஓடி வீட்டினுள் நுழைய முயன்ற 4 அடி நீள நல்ல பாம்பை தடுத்து நிறுத்தியது. இதனைப்பார்த்த குடும்பத்தினர் பாம்பாட்டிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பாம்பாட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் வரும் வரை நின்ற இடத்தை விட்டு பாம்பு நகராமல் அந்த பூனை பார்த்து கொண்டது. பாம்பாட்டி வந்து பாம்பை பிடித்து பையில் அடைக்கும் வரை பூனை காவலுக்கு நின்றது. இதனையடுத்து அங்குவந்த பம்பாட்டி அந்த பாம்பை பிடித்துச்சென்றார். இது தொடர்பான சிலிர்க்க வைக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.