மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேசியபங்குச்சந்தை முறைகேடு விவகாரம்.. இமயமலை சாமியாரின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய சி.பி.ஐ.!
2013 - 2016 ஆம் வருடத்தில் தேசிய பங்குசந்தையில் நடந்த முறைகேடு தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் மர்மமான இமயமலை சாமியாரின் உண்மை முகம் வெளியாகியுள்ளது.
இந்திய தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனராக, கடந்த 2013 - 2016 ஆம் வருடம் வரை பணியாற்றியவர் சித்ரா இராமகிருஷ்ணன். இவரின் மீது பல்வேறு முறைகேடு குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டது. மேலும், சித்ரா இராமகிருஷ்ணன் முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பவரை தலைமை வியூக அதிகாரியாக நியமனம் செய்ததாகவும் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) கூறியது.
இதுமட்டுமல்லாது, இமயமலை சாமியார் என்ற பெயரில், அவரின் பேச்சுக்களை கேட்டு முறைகேடு செயல்களில் ஈடுபட்டதாகவும், அதன் புள்ளி விபரங்களை கசியவிட்டதாகவும் சி.பி.ஐ சித்ரா இராமகிருஷ்ணன், ரவி நரேன், ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு சம்மன் வழங்கியது. இதனையடுத்து, ஆனந்த் சுப்பிரமணியம் கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னையில் வைத்து சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் விசாரணை நடக்கும்போதே இமயமலை சாமியார் சர்ச்சை எழுந்துகொள்ள விசாரணையில், ஆனந்த் சுப்பிரமணியன் தான் அது என்பது உறுதியானது. டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. மேலும், இமயமலை சாமியார் போல நடித்த விசயத்திற்கு சித்ராவும் உடந்தையாக இருந்தது அம்பலமானது. அதனால் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது எனவும் சி.பி.ஐ நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. இதனால் நீதிபதி அவரின் ஜாமின் மனுவை ஒத்திவைத்துள்ளார்.