மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊரடங்கு உத்தரவால் வங்கி செயல்பாட்டில் மாற்றம்.!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியதால் பிரதமர் மோடி சரியான நேரத்தில் ஊரடங்கை அமல்படுத்தியதால் கொரோனா பரவல் இந்தியாவில் சற்று குறைய தொடங்கியது. இந்தியாவில் ஊரடங்கு ஏப்ரல் 14 வரை அறிவித்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? எவை கிடைக்காது என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வங்கிகள், பண பரிவர்த்தனை தவிர பிற சேவைகளை மேற்கொள்ளவில்லை. ஊரடங்கு காலத்தில் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை வங்கிகள் இயங்கும் என்று கூறப்பட்டது. கொரோனா நிவாரணத்தொகையை மத்திய அரசு, வங்கிக்கணக்கின் வழியே செலுத்தியது. இந்த தொகையை எடுப்பதற்காக வங்கிகளில் தினமும் கூட்டம் கூடியதால், வங்கிகள் இயங்கும் நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வங்கிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு இரண்டாவது முறையாக நீடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை வங்கிகள் இயங்கும் என்று மாநில அளவிலான வங்கிக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.