3 கண்கள், 4 மூக்குகளுடன் பிறந்த கன்றுக்குட்டி.. சிவனின் அவதாரம் என மக்கள் வழிபாடு.!



Chhattisgarh Cow Delivery Baby Have 3 Eyes and 4 Nose Peoples Says Cow Like Lord Shiva

விவசாயி வளர்ந்து வந்த பசு, 3 கண்கள் மற்றும் 4 மூக்குகள் கொண்ட கன்றுக்குட்டியை ஈன்றெடுத்து. உள்ளூர் மக்கள் அதனை சிவனின் அவதாரமாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.

சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள ராஜ்நந்த்கான் மாவட்டம், கண்டாய் கிராமத்தை சார்ந்தவர் நீரஜ் சண்டல். இவர் விவசாயியாக வாழ்ந்து வரும் நிலையில், இவரின் வீட்டில் பசுமாடுகள் உள்ளன. சமீபத்தில் கர்ப்பமாக இருந்த பசுவொன்று, நேற்று கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. ஏற்கனவே அந்த பசு 2 குட்டிகளை ஈன்று இருந்த நிலையில், இது 3 ஆவது கன்றுக்குட்டியாகும். 

இந்த கன்றுக்குட்டி பிறந்த நேரத்தில் பலரையும் ஆச்சர்யப்படும் வகையில் பிறந்தது தற்போது தெரியவந்துள்ளது. முதலில் கன்றுக்குட்டியை பசுமாடு ஈணுகையில் அருகே இருந்த நீரஜ் குடும்பத்தினர், கன்றுக்குட்டியின் நெற்றியில் எதோ இருப்பதை பார்த்துள்ளனர். கன்று தாயின் வயிற்றில் இருந்து முழுவதுமாக வெளியே வந்ததும் சோதனை செய்கையில், கன்றுக்கு 3 கண்கள் இருப்பது, 4 மூக்கு துவாரங்கள் இருப்பதும் தெரியவந்தது. 

இந்த செய்தி அக்கிராமம் முழுவதும் காட்டுத்தீபோல பரவிடவே, மக்கள் இந்து தெய்வமான சிவனின் பிறப்பாக இருக்கலாம் என எண்ணி, அந்த அதிசய கன்றுக்குட்டியை வந்து பார்த்து ஆசி வாங்கி செல்கின்றனர். இன்னும் சிலர் காணிக்கையாக தேங்காய் போன்ற பொருட்களையும் கொடுத்து செல்கின்றனர். 

Chhattisgarh

இந்த விஷயம் குறித்து நீரஜ் சண்டல் தெரிவிக்கையில், "நான் பிறந்ததில் இருந்து தற்போது வரை மூன்று கண்கள் உடைய கன்றுக்குட்டியை பார்த்தது இல்லை. எனக்கு தெரிந்து மூன்று கண்கள் என்று கூறினால் அது சிவபெருமான் மட்டுமே. இந்த கன்றுக்குட்டி தெய்வீக அதிரசம். இறைவனின் அவதாரம்" என்று தெரிவித்தார். கன்றுக்குட்டிக்கு மருத்துவ பரிசோதனையும் நடந்த நிலையில், அது ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த கன்றுக்குட்டி தொடர்பாக கால்நடைத்துறை மருத்துவர் தருண் ராம்தேகே தெரிவிக்கையில், "மூன்று கண்களுடைய கன்றுக்குட்டி தெய்வீக அற்புதம் இல்லை. இது ஹார்மோன் கோளாறு ஆகும். இவை நீண்ட காலம் வாழாது. சில கன்றுகள் மட்டுமே இறுதி வரை வாழும். பெரும்பாலும் இவ்வாறு பிறக்கும் கன்றுகள் இரண்டு வருடங்கள் வரை வாழலாம் அல்லது 10 முதல் 15 நாட்கள் வாழும்" என்று தெரிவித்தார்.