தலைமுடி கொட்டுவது ஒரு பிரச்சினையா? அதுக்காக இப்படியா செய்வது..கதறும் பெற்றோர் .!
தலைமுடி கொட்டியதால் மைசூரில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மாணவியர் விடுதியில் தங்கி பிபிஏ படித்து வருபவர் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த நேகா என்ற இளம்பெண்.
இவர் சில தினங்களுக்கு முன்பு தனது தலைமுடியை அழகுபடுத்த அப்பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று தனது முடியை அழகாக வெட்டியுள்ளார்.அப்பொழுது அந்த பார்லரில் அவரது முடிக்கு ஏதோ கெமிக்கல் தடவப்பட்டுள்ளது.
இதனால் அவரது முடி கொட்டத் தொடங்கியது.மேலும் நாளுக்கு நாள் முடி கொட்டுவது அதிகமாகி உள்ளது. இதனை தடுக்க நேகா பல வழிகளை மேற்கொண்டும்,சிகிச்சை செய்தும் எந்த பலனும் இல்லை. அவரது முடி உதிர்வு சிறிதும் குறையவில்லை.
இதனால் மனம் வருந்திய அவர் கல்லூரிக்குச் செல்ல அவமானப்பட்டு சொல்லாமலே இருந்துள்ளார்.மேலும் நாளாக முடி உதிர்தலை எண்ணி விரக்தி அடைந்த அவர் திடீரென லட்சுமண தீர்த்த நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேகாவின் பெற்றோர்கள் தனது மகளின் தற்கொலைக்கு காரணமான அழகு நிலைய ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இவ்வாறு முடி கொட்டியதால்இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.