டீக்கடை நடத்தும் பொறியியல் கல்லூரி மாணவி.! ஒரு டீயின் விலை எவ்ளோ தெரியுமா??



college-student-conduct-tea-shop

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள், இளைஞர்களுக்கு தொழிலதிபர்களாக வேண்டும் என்ற கனவு அதிகளவில் உள்ளது. இந்த நிலையில் அவர்கள் புதிய தொழில்களை குறித்து ஆராய்ந்து அவற்றை புதிய ஐடியாக்களுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பீகாரை சேர்ந்த பொறியியல் மாணவி ஒருவர் டீ கடை ஒன்றை துவங்கியுள்ளார். பீஹார் மாநிலத்தில் வசித்து வருபவர் வர்த்திகா சிங். அவருக்கு சிறுவயதிலிருந்தே சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற கனவு இருந்து வந்துள்ளது. தற்போது வர்த்திகா ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் பிடெக் படித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது சொந்த டீக்கடையை துவங்கியுள்ளார். அந்த கடைக்கு அவர் B.Tech Chaiwali எனப் பெயர் சூட்டியுள்ளார். இக்கடை நாள்தோறும் மாலை 5.30 முதல் இரவு 9 மணிவரை  நடக்கிறது. இதில் அவர் சாதாரண டீயை 10 ரூபாய்க்கும், லெமன் டீயை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகிறார். இவரது கடைக்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. மேலும் இவரது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.