மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Watch || பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு நடத்துநர் பரிதாப பலி.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்!!
பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர் பரிதாப பலி.
சாலையின் வளைவில் வேகமாக திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்த நடத்துனர் பரிதாபமாக உயர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியூட்டும் வகையால் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ள இச்சம்பவம் குறித்த விபரம்: பொதுவாக பேருந்து வளைவில் திரும்பும் பொழுது சற்று பொறுமையாகவே திரும்ப வேண்டும். ஆனால் இந்த பேருந்தானது வளைவில் மிகவும் வேகமாக திரும்பியுள்ளது.
இதனால் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த நடத்துனர் பேருந்தில் இருந்து வேகமாக தூக்கி வீசப்பட்டார். இதனால் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வளைவில் பேருந்து திரும்பியபோது ஏற்பட்ட விபரீதம்.. தூக்கி வீசப்பட்டு நடத்துநர் பரிதாப பலி.. அதிர்ச்சியூட்டும் காட்சிகள்#Karnataka #Busconductor #Death #NewsTamil24x7 pic.twitter.com/5JEhAe4Vh1
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) August 30, 2023