மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் வரலாம்.! இன்று நடக்கும் முக்கிய கூட்டம்.!
சமீபத்தில் நடந்துமுடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. எஞ்சியுள்ள 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது.
நடந்துமுடிந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இதனையடுத்து, தேர்தலில் தோல்வியைச் சந்தித்த 5 மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் இன்று (16-03-2022) நடக்கிறது. டெல்லியில் உள்ள மூத்த தலைவர் கபில்சிபல் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.