அமிதாப்பச்சன், ரஜினி உட்பட பல பிரபலங்கள் ஒரே குடும்பமாக.. வெளியான கொரோனா விழிப்புணர்வு குறும்படம்!



coronovirus-awarness-video-leaked-by-soni-music

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் அதிதீவிரமாக பரவி  வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில்,  4421 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் , சமூக விலகலை  பின்பற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். 

Coronovirus

மேலும் பல திரைபிரபலங்களும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் சோனி இந்தியா நிறுவனம் கொரோனா விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய திரையுலகப் பிரபலங்களான அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், மம்முட்டி, சிரஞ்சீவி, மோகன்லால், ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் உட்பட மேலும் பல பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.

 இதன் முடிவில் அமிதாப்பச்சன், இந்த வீடியோ தனித்தனியாக அவரது வீட்டில் எடுக்கப்பட்டது. நாங்கள் யாரும் எங்களது வீட்டை விட்டு வெளியே வரவில்லை. நீங்களும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள் என கூறியுள்ளார். மேலும் இந்திய சினிமா நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக உள்ளோம். ஊரடங்கு உத்தரவால் பலரும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு டிவி சேனல்கள் மற்றும் ஸ்பான்சர்கள் மூலம் உதவ உள்ளோம், அனைவரும் பயப்படாமல் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.