மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிலப்பிரச்சனையில் 4 சிறுவன் இளம்பெண்ணால் அடித்தே கொலை.. குமரி துயரம் அடங்குவதற்குள் மற்றொரு சோகம்.!
பண்ரூட்டி அருகே 4 வயது சிறுவன் கொலை விவகாரத்தில், 25 வயது இளம்பெண் அளித்துள்ள வாக்குமூலம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி அருகே 4 வயது சிறுவன் நகைக்காக கொலை செய்யப்பட்ட நிலையில், பண்ரூட்டியில் நிலப்பிரச்சனையில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளான்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவரின் மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் அபி என்ற 11 வயது மகனும், அஸ்வத் என்ற 4 வயது மகனும் இருக்கின்றனர். சிறுவன் அஸ்வந்த் நேற்று முன்தினத்தில் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், தீடீரென அவன் மாயமாகி இருக்கிறான்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் சிறுவனை தேடியும் காணாததால், பண்ரூட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு சிறுவனை தேடி வந்த நிலையில், அங்குள்ள முந்திரி தோப்பில் அஸ்வத் இரத்த காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறியழவே, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காடாம்புலியூர் காவல் துறையினர் சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுவனின் உடல்களில் காயம் இருந்ததால், அவனை யாரோ அடித்து கொலை செய்துள்ளார்கள் என்பதை உறுதி செய்த அதிகாரிகள் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். அப்போது, சிறுவனின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த முருகவேல் என்பவரின் மகள் ரஞ்சிதா (வயது 25), அஸ்வத்தை அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தது அம்பலமானது.
தலைமறைவாக இருந்த ரஞ்சிதா, வெளியூர் செல்லும் போது கீழக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். காவல் துறையினர் விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலமாவது, "அஸ்வத்தின் பெற்றோருக்கும், எனது பெற்றோருக்கும் இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்தது. இதற்கு பழிவாங்க சிறுவனை கொலை செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கன்னியாகுமரியில் 4 வயது சிறுவன் அணிந்திருந்த நகைக்காக கொலை செய்யப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண்மணி கணவருடன் கைது செய்யப்பட்டார். அந்த துயரம் அடங்குவதற்குள், 4 வயது சிறுவன் பக்கத்து வீட்டு பெண்ணால் நிலப்பிரச்சனையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.