#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாலையில் தொழுகை செய்த இஸ்லாமியர்களை கால்களால் எட்டி உதைத்த காவலர்; டெல்லியில் அதிர்ச்சி சம்பவம்.!
டெல்லியில் உள்ள தோமர் சாலையில் இன்று, அவ்வழியாக பயணித்த இஸ்லாமிய மக்கள் சாலையில் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டனர்.
அச்சமயம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்க, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் தொழுகையில் ஈடுபட்ட நபர்களை சாலையில் இருந்து ஓரமாக செல்ல அறிவுறுத்தினர்.
தொடர்ந்து அவர்கள் தொழுகையை முடிக்க காத்திருந்தனர். இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் தோமர் என்பவர், இஸ்லாமியர்களை கால்களால் எட்டி உதைத்தார்.
சிலரை கடுமையாகவும் தாக்கி அங்கிருந்து அனுப்ப முயற்சித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விடியோவும் வெளியாகி கண்டனங்கள் குவிந்து வந்தன.
இதனையடுத்து, டெல்லி காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், சர்ச்சை செயலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
दिल्ली में नमाज पढ़ रहे लोगों को एक पुलिसकर्मी ने लात मारी। इस पर हंगामा खड़ा हो गया। पुलिसकर्मी के इस व्यवहार पर दिल्ली पुलिस ने जांच शुरू कर दी है। #Delhi pic.twitter.com/tYEDrmUaDT
— Sachin Gupta (@SachinGuptaUP) March 8, 2024