மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#ShockingNews: உள்ளூர் பாஜக தலைவர் சுட்டுக்கொலை.. டெல்லியில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்களால் பதற்றம்.!
மயூர் விஹார் பகுதியில் உள்ளூர் பாஜக தலைவர் ஜித்து சவுதாரி என்பவர் மர்ம நபரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தால் மக்கள் மற்றும் காவல் துறையினர் காயம் அடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டதாக முக்கிய குற்றவாளிகள் அன்சார் மற்றும் முகமது உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று, டெல்லி மாநகராட்சி ஜஹாங்கிர்புரி நகரில் சட்டவிரோதமாக குடியிருப்புகளை ஏற்படுத்தி வசித்து வந்தோரின் வீட்டு தரவுகளை சேகரித்து, பலத்த காவல் துறை பாதுகாப்புடன் பல குடியிருப்புகள் மற்றும் கடைகளை இடித்து தரைமட்டமாக்கியது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் உள்ளூர் பாஜக தலைவர் ஜித்து சவுதாரி என்பவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். நடுரோட்டில் இரவு 08:15 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர்.
மேலும், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து, ஜித்துவை சுட்டு கொன்றவனை அதிகாரிகள் சி.சி.டி.வி கேமிரா உதவியுடன் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.