மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் எதிரொலி; 144 தடை உத்தரவு பிறப்பிப்பு, மக்கள் கூடுவதற்கும் தடை.!
டெல்லி ராஜ்கோட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சூரத் நீதிமன்றத்தின் 2 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்புக்கு பின்னர், அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விசயத்திற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர், நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து போராடி வருகின்றனர்.
இன்று டெல்லியில் உள்ள ராஜ்கோட் பகுதியில் உண்ணாவிரதப்போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அம்மாநில காவல்துறை சட்டம் ஒழுங்கை மேற்கோளிட்டு அனுமதிக்கு மறுப்பு தெரிவித்தது.
மேலும், ராஜ்கோட் பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ள டெல்லி மாநில நிர்வாகம், தடையை மீறி பொதுமக்கள் கூடவும் தடை விதித்துள்ளது.