மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டி.கே-வின் ராஜியத்தில் உய்யலாலா: உற்சாகத்தில் மிதக்கும் தினேஷ் கார்த்திக்!, கனவு நனவானதாக பெருமிதம்..!
ஆசிய கோப்பை டி-20 தொடர் நிறைவடைந்துள்ளதை அடுத்து உலக கோப்பை டி-20 தொடருக்கான அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
7 வது டி-20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 16 அணிகள் இந்த போட்டி தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த நிலையில் இந்த உலக கோப்பை டி-20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Dreams do come true 💙
— DK (@DineshKarthik) September 12, 2022
இந்த நிலையில், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் டி-20 உலக கோப்பை போட்டி தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கனவு நனவாகி இருப்பதாக பதிவிட்டுள்ளார்.