மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எல்லா உயிர்க்கும் வலி ஒன்றுதான்.. குட்டியை இழந்து கதறி துடித்த நாய்.! கண்கலங்க வைக்கும் வீடியோ.!
பூமியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணர்வுகள் இருக்கும். மனிதர்களைப் போலவே பிற உயிரினங்களுக்கும் பாசம், வலி போன்றவை உண்டு. அதிலும் நாய் நன்றியுள்ளது என்பர்.
அதுமட்டுமின்றி தன்னை அன்பாக நடத்துபவர்களிடம் உயிரையும் கொடுக்கும் அளவிற்கு விசுவாசமாக இருக்கும். இந்நிலையில் சாலையில் உயிரிழந்த தனது குட்டிக்காக தாய் நாய் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
अपनो के मरने की पीड़ा मनुष्य हो या पशु पक्षी सभी को होती है जैसा कि इस मार्मिक वीडियो में आप देख सकते है इसलिए निवेदन यह है की गाड़ी चलाते समय ये ध्यान रखे किसी मां के बच्चे के ऊपर से आपकी गाड़ी ना गुजर जाए. pic.twitter.com/cdsCrqkqXd
— उम्दा_पंक्तियां (@umda_panktiyan) August 1, 2022
குறித்த வீடியோவில் நாய்க்குட்டி ஒன்று சாலையில் அடிபட்டு உயிரிழந்து கிடக்கிறது. அதன் அருகே மற்றொரு குட்டியுடன் தாய் நாய் கதறி அழுதுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எத்தகைய உயிராக இருந்தாலும் வலி ஒன்றுதான். சாலையில் செல்பவர்கள் மற்ற உயிர்களை மதித்து அவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் கவனமாக செல்ல வேண்டும்.