மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனிமே குடிக்காதீங்க.. மதுபோதை கணவனை கண்டித்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.!
மது போதையில் வந்த கணவனை கண்டித்த மனைவி அடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள கிரமகொண்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹனமந்தா - அர்பிதா தம்பதியினர். இவர்களது கிராமத்தில் நேற்று இரவு திருவிழா நடைபெற்று உள்ளது. இதனையடுத்து இவர்களது வீட்டிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்துள்ளனர்.
இதில் குடிப்பழத்திற்கு அடிமையான ஹனமந்தா நேற்றும் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால் எரிச்சலடைந்த அவரது மனைவி கணவனை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஹனமந்தா தனது மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்த அர்பிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த அர்பிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய ஹனமந்தாவை போலீசார் தேடி வருகின்றனர்.