8 முறை மத்திய அமைச்சராக இருந்தவர் மீண்டும் கலப்பை பிடித்து விவசாயம் செய்ய முடிவு; யார் தெரியுமா?



ex-parliment-mp-hariya-munda---farmer

இந்தியா முழுவதும் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை நடக்கிறது. இதன் முடிவுகள் மே 23 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பாஜகவின் சார்பில் கரியா முண்டா முன்னாள் முதல்வர் அர்ஜூன் முண்டாவை வீழ்த்தி, குந்தி மக்களவை தொகுதியில் வென்று 8வது முறையாக எம்.பியாகி உள்ளார்.

ex mp

விவசாய குடும்ப பின்னணியில் இருந்து அரசியலுக்கு வந்த இவர் இருமுறை எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார். மத்திய அமைச்சராகவும், மக்களவை துணை சபாநாயகராகவும் பதவி வகித்துள்ளார். இந்த முறையும் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் விரக்தி அடைந்த அவர் மீண்டும் கலப்பை பிடித்து விவசாயம் செய்ய முடிவெடுத்துள்ளார்.