மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்திய தேசிய கோடியை அவமதித்த பிரபல பாடகியின் மீது பாய்ந்த வழக்கு!!
உக்ரனை சேர்ந்த பிரபல இசைக் குழுவில் முன்னணி பாடகியாக திகழ்பவர் உமா சாந்தி என்பவர். இவர், சமீபத்தில் இந்த குழுவின் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பாடியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியானது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனேவில் உள்ள கிளப் ஒன்றில் நடைபெற்று உள்ளது. இந்நிகழ்ச்சியில் பாடிய உமா சாந்தி அவரது கைகளில் இந்திய தேசிய கொடியை பிடித்துக் கொண்டு நடனமாடியுள்ளார்.
பின்னர் திடீரென்று அவர் வைத்திருந்த கொடிகளை பார்வையாளர்களை நோக்கி வீசியுள்ளார். இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இது குறித்து கோரேகான் பார்க் காவல் நிலையத்தில் பாடகி உமா சாந்தி மீது புகார் அளிக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சி அமைப்பாளர் கார்த்திக் மெரீன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.