மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பென்சில் கேட்டாலே எங்க அம்மா அடிக்கிறாங்க.. விலையேற்றத்தின் தாக்கத்தால் மாணவி பிரதமருக்கு கடிதம்..!
பென்சில், ரப்பர், மேகி போன்ற பொருட்களின் விலையேற்றத்தால் தான் மிகவும் சிரமப்படுவதாக முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த கிரீத்தி டுபே அந்த கடிதத்தில், 'என் பெயர் கிரீத்தி டுபே, நான் முதலாம் வகுப்பு படித்து வருகிறேன். மோடிஜி அவர்களே நீங்கள் மிகப்பெரிய விலை ஏற்றத்தை உருவாக்கி விட்டீர்கள். என்னுடைய பென்சில், ரப்பர் மற்றும் மேகி ஆகிய பொருட்களின் விலையும் கூட ஏறிவிட்டது.
இப்போலாம் பென்சில் கேட்டாலே எங்க அம்மா என்ன அடிக்கிறாங்க. அடுத்தவங்களும் என் பென்சில திருடிறாங்க, நான் என்ன பண்றது?' என அந்த மாணவி கடிதத்தில் எழுதி உள்ளார். இந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.