திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நண்பர்களை பார்த்து குரைத்தபடி சீறிவந்த தெரு நாய்கள்.! கல்லால் அடிக்க முயற்சித்தபோது ஏற்பட்ட மோதல்.! காயமடைந்த 5 பேர்.!
டெல்லியில் நண்பர்கள் மூன்றுபேர் நேற்று முன்தினம் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதியில் இருந்த நாய்கள் திடீரென அவர்களை பார்த்து குரைத்தபடி சீறிவந்துள்ளது. இதனால், பயந்து போன அவர்களில் ஒருவர் கல்லை எடுத்து ஒரு நாயின் மீது எறிந்துள்ளார்.
ஆனால், அவர் வீசிய கல் ஒருவரது வீட்டு கதவின் மீது பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகன்கள் மூன்றுபேரும் சேர்ந்த கல் வீசியவர்கள் மீது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இருதரப்பினரும் ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.