குட்டியை காக்க முடியாத சூழலில் மயங்கிய யானை : வனத்துறையினர் நெகிழ்ச்சி செயல்.. நெஞ்சை இதமாக்கும் வீடியோ.!



Forest Dept Officers Helps Elephant

 

யானைகள் மிகவும் அன்புள்ளவவை, அறிவானவை. அவைகளின் அன்பு அவர்களுடன் பழகும் போது தான் தெரியவரும். வனப்பகுதிக்குள் ராஜாவாக வலம்வரும் அவைகள், கோடைகாலங்களில் நீர் மற்றும் உணவு இருக்கும் இடத்திற்கு புலம்பெயர்ந்து செல்லும். 

இவ்வாறான நேரங்களில் வழிகளில் இருக்கும் குட்டைகளில் நீரை குடிக்க முயற்சித்து, சில நேரங்களில் அவைகளில் சிக்கிக்கொள்ளும். இதில், கூட்டத்தில் குட்டியானை இருந்தால் சில நேரங்களில் அவைகள் அப்பள்ளங்களில் விழுந்து மேலே ஏறி வர இயலாமல் தவிக்கும். 

அப்படியொரு சம்பவம் நடைபெற்ற நிலையில், குழந்தையை காப்பாற்ற முயற்சித்த தாய் யானை மயங்கி விழுந்துள்ளது. மீட்பு பணிகளில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு யானையின் உயிரை காப்பாற்றினர். 

மேலும், குட்டி யானையும் வெளியே எடுக்கப்பட்ட நிலையில், தாயும் - குட்டி யானையுமாக இருவரும் காட்டுக்குள் அமைதியாக பயணம் செய்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யானைக்கு உதவிய வனத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.