மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்நாடகா முன்னாள் முதல்வரின் பேத்தி தூக்கிட்டு தற்கொலை.. கண்ணீரில் குடும்பத்தினர்.!
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த எடியூரப்பாவின் மூத்த மகளான பத்மாவின் மகள் சௌந்தர்யா. இவர் பெங்களூரில் உள்ள எம்.எஸ் ராமையா மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக தன்னுடன் பணியாற்றி வரும் சக மருத்துவரை காதலித்து, குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம்பிடித்தார். இவர்கள் இருவருக்கும் 6 மாத குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பின்னர் சௌந்தர்யா தனது கணவருடன் பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரிக்கு அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கியவாறு சௌந்தர்யா சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சௌந்தர்யாவின் மரணம் அவர்களின் குடும்பத்தினரை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.