தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு! எவ்வளவு விலை குறையும் தெரியுமா?
டெல்லியில் இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் 7 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28%இல் இருந்து 18% ஆகவும், மீதமுள்ள 26 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 12%இல் இருந்து 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஏசி, டிவி, கேமரா உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டது. இன்னும் மகிழ்ச்சியான செய்தி, திரையரங்குகளில் திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளுக்கு வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், மற்றும் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். டிக்கெட் விலை ஏற்றத்தினால் திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால் இனிமேல் இந்த வரி குறைப்பினால் மக்கள் அதிகமாக திரையரங்குகளுக்கு வருவார்கள் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திரைப்படங்களுக்கான டிக்கெட்டுகளுக்கு வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியில், 100 ரூபாய்க்கும் குறைவான டிக்கெட்டுகளுக்கு இதுவரை 18 சதவிகிதம் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வாரியானது இப்பொழுது 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கும் அதிகமான டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகிதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே திரையரங்குகளில் டிக்கெட் விலை வெகுவாக குறைய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது.