மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி வகுப்பறையில் 15 வயது சிறுமி மாரடைப்பால் மயங்கி மரணம்; இளம் வயதில் இப்படியொரு சோகமா?..!
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட், ஜார்தான், சந்த்பா கஜீரா பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் பயின்று வரும் மாணவி சாக்ஷி ரஜோஸரா (வயது 15).
09ம் வகுப்பு பயின்று வரும் சிறுமி, சம்பவத்தன்று தனது பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழவே, அவரை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
மருத்துவமனையில் சிறுமி உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தவே, அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த பெற்றோர், சிறுமியின் உடலை கட்டியணைத்து கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே குஜராத் மாநிலத்தில் மாரடைப்பு மரணங்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் வயதுடையவர்கள் மரணமடைந்து இருக்கின்றனர்.