மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொலைதூர இரயிலில் உறங்கும் பயணிகள் டார்கெட்.. பலநாள் திருடன் அகப்பட்ட சம்பவம்.!
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, தொலைதூர இரயில் பயணிகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.
குஜராத் மாநிலத்தின் வரதோதரா இரயில் நிலையம் வழியே செல்லும் தொலைதூர இரயில் பயணிகளின் விலையுயர்ந்த பொருட்கள், செல்போன்கள் போன்றவை தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இந்த விஷயம் தொடர்பாக பயணிகள் பல்வேறு காவல் நிலையத்தில் புகார்கள் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இரயிலில் கைவரிசை காண்பித்து வரும் குற்றவாளியை கைது செய்ய, வதோதரா இரயில்வே காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, வதோதரா இரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிய நபரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணையின் போது அவர் முன்னுக்கு பின்னர் முரணான பதில் அளிக்கவே, சந்தேகமடைந்த காவல் துறையினர் இரயில் நிலைய காவல் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பல வருடமாக தொலைதூர இரயில் பயணிகளை குறிவைத்து திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையன் என்பது அம்பலமானது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லலித்பூரை சேர்ந்த நபர், அங்கிருந்து குஜராத்தின் வதோதரா செல்லும் இரயிலில் பயணம் செய்து, பயணிகளின் பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், உறங்கிக்கொண்டு இருக்கும் பயணிகளை குறிவைத்தே பெரும்பாலான திருட்டு நடந்துள்ளது என்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அவரிடம் இருந்து ரூ.11 இலட்சம் மதிப்புள்ள திருடப்பட்ட பொருட்களை கைது செய்த அதிகாரிகள், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.