தாய்மார்களே உஷார்!!! குழந்தைக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது விஷம் கொடுப்பதற்கு சமமா..? அதிர்ச்சி தகவல்!!!



harms-of-drinking-grape-water-for-children

பிறந்த குழந்தைக்கு வயிறு வலி ஏற்பட்டாலும் அல்லது வயிறு சம்பந்தமான பிரச்சனை இருப்பதாக நினைத்தாலும் நம் தாய்மார்கள் குழந்தைக்கு முதலில் கொடுப்பது கிரைப் வாட்டர் தான். 

நம் குழந்தையின் வயிறு உப்பி இருத்தல், மலம் கழிக்க கஷ்டப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நாம் கிரைப் வாட்டர் கொடுப்பது தவறு என குழந்தைகள் நல மருத்துவர் தெரிவிக்கின்றனர். குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர வேறு எந்த உணவும் கொடுக்க கூடாது.

Born babies

அதன்படி சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் அருண் பாபு திருநாவுக்கரசு ட்விட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது இக்காலகட்டத்திலும் கூட கிரைப் வாட்டர் கொடுக்கும் வழக்கம் தாய்மார்களிடம் மாறாத ஒன்றாக உள்ளது. இது உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்றாகும்.

தொடர்ச்சியாக இதை  குழந்தைகளுக்கு  கொடுப்பதால் மிக மோசமான உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக இதில் கலக்கப்படும் "ப்ரோனோபோல்" என்னும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்த மூலக்கூறு உள்ளது. இந்த ப்ரோனோபோல் என்பது குழந்தைகள் எடை இழப்பு, புற்றுநோய் மேலும் மரணத்தைக் கூட உண்டாக்கும் சக்தி இந்த மூலக்கூருக்கு உள்ளது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.