மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அறுவடைக்கு தயாரான கோதுமைகள் கண்முன் தீயில் நாசம்... கண்ணீரில் விவசாயிகள்..!
சில நாட்களில் அறுவடை செய்திடலாம் என தயார் நிலையில் இருந்த கோதுமைகள் தீயில் எரிந்து நாசமான சோகம் நடந்துள்ளது.
இந்தியாவில் மட்டும் விவசாயிகளுக்கு என பல்வேறு பிரச்சனைகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வடிவில் இருந்தாலும், அதனை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதே அவர்களின் கண்ணீரை தொடர்ந்து வடியவைக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னல் மாவட்டம், கச்சவா கிராமத்தில் 5 கி.மீ பரப்பளவில் கோதுமையானது விவசயிகளால் பயிரிடப்பட்டு இருந்தது. இந்த கோதுமைகள் இன்னும் சில நாட்களில் அறுவடை செய்யவும் தயார் நிலையில் இருந்துள்ளது. இந்த நிலையில், விவசாயிகளுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தும் வகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அறுவடைக்கு தயாராக இருந்த கோதுமையின் மீது பரவிய தீயானது, 5 கி.மீ பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த கோதுமையை முற்றிலுமாக எரிந்து நாசம் செய்துள்ளது. கோதுமையை பாதுகாக்க விவசாயிகள் எடுத்த முயற்சியும் காற்றின் வேகத்தால் தோல்வியில் முடிந்து, கோதுமை பயிர்கள் நாசமாகியுள்ளன.