மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாருகிட்ட.. முடிஞ்சா வந்து பாரு! பாம்பையே பதறவைத்த தாய்கோழி! வீடியோ இதோ!!
கோழி ஒன்று அடைக்காத்து கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த பாம்பையே கொத்தி விரட்டியடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்காலத்தில் சமூக வலைதளங்களில் விலங்குகள், பறவைகள் குறித்த வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது தாய்க்கோழியின் சுவாரசியமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக எத்தகைய செயல்களையும் செய்யத் தயங்க மாட்டார்கள். மேலும் தங்களது குழந்தைக்கு ஏதாவது ஆபத்து வந்தால் தங்கள் உயிரைக் கொடுத்தாவது அவர்களை காக்கவே எண்ணுவர். மேலும் குழந்தைகளை பாதுகாப்பாக, துன்பங்கள் நெருங்காவண்ணம் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வர்.
மனிதராக இருந்தாலும் சரி, விலங்கு மற்றும் பறவைகளாக இருந்தாலும் சரி இந்தத் தாய் உணர்வு அனைவருக்கும் ஒன்றுதான். இந்நிலையில் கோழி ஒன்று அடைகாத்துக் கொண்டிருந்த போது அங்கு பயங்கர பாம்பு ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் தனது முட்டைகளை காப்பாற்ற எண்ணிய அந்த கோழி சிறிதும் அச்சப்படாமல் அந்த பாம்புடன் சண்டை போடுகிறது. பாம்பு முட்டையை எடுக்க வாயை திறக்கும் போதெல்லாம், கோழி சிறிதும் தயங்காமல் அதனை கொத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.