மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடை மாற்ற அறைக்குள் சென்ற இளம் பெண்! கதை தட்டி பெண் ஊழியர் கூறிய அதிர்ச்சி செய்தி.
டெல்லியில் உள்ள துணி கடை ஒன்றுக்கு துணி எடுக்க சென்றுள்ளார் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர். அவர் துணி எடுத்துவிட்டு துணி மற்றும் அறை எங்குள்ளது என அங்கிருக்கும் பெண் ஊழியர் ஒருவரிடம் கேட்டுள்ளார். அவர் அருகில் இருக்கும் ஒரு அறையை காட்டி அங்கு சென்று மாற்றிக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனை அடுத்து அந்த அறைக்கு சென்று அந்த பெண் பத்திரிகையாளர் துணி மாற்றிக்கொண்டிருக்கும் போது பெண் ஊழியர் கதவை தட்டி இங்கே துணி மாற்ற வேண்டாம் என கூறியுள்ளார். பெண் பத்திரிகையாளர் ஏன் இங்கே துணி மாற்ற கூடாது என கேட்க இங்கே கேமிரா இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பத்திரிகையாளர் இங்கு கேமிரா உள்ளது என்ற ஏன் என்னை இந்த அறையில் துணி மாற்ற கூறினீர்கள் என அந்த பெண் ஊழியரிடமும், கடை உரிமையாளரிடமும் கேட்டு சண்டை போட்டுள்ளார். ஆனால், அதற்கு யாரும் சரியான பதில் கூறவில்லை.
இதனால் தான் போலீசில் புகார் கொடுக்க போவதாக அந்த பெண் பத்திரிகையாளர் கூறியதை அடுத்து கடையின் உரிமையாளர் தனது மகனை அழைத்து அந்த வீடியோவை டெலிட் செய்யுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் பத்திரிகையாளர் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தலைநகர் டெல்லியில் துணி கடை ஒன்றில் இப்படி நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.