மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிபோதையில் மனைவியின் மீது சிறுநீர் கழித்து கொடுமை.. கோடியில் புரண்ட கேடுகெட்ட கணவனின் செயலால் அதிர்ச்சி.!
போதைக்கு அடிமையான கணவர் மனைவி மீது சிறுநீர் கழித்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் சந்தீப். இவர் தெலுங்கானாவில் உள்ள பிரபல ஆடை தொழில் உரிமையாளரின் மகளை கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு தெலுங்கானாவில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் 6 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் 200 கிலோ வெள்ளி, 4 கிலோ தங்கம் மற்றும் 55 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும் பரிசாக கொடுத்துள்ளனர்.
ஆனால் இதற்கெல்லாம் எவ்வித தகுதியும் இல்லாத சந்தீப் நாளடைவில் போதைக்கு அடிமையானவர் என்பது தெரியவந்தது. மேலும் தினமும் தனது நண்பர்களுடன் வீட்டில் மது அருந்தி வந்துள்ளார். இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவே, தனது நண்பர்கள் முன்னிலையில் அவரை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த பெண், சந்திப்பின் மீது பசவனகுடி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், சில நாட்களுக்கு முன் மது போதையில் இருந்த சந்தீப் பெண்ணின் தலையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சந்தீப் மீது பெண் புகார் கொடுத்ததால் காவல்துறையினர் வரதட்சணை கொடுமை மற்றும் போதையில் மனைவி மீது சிறுநீர் கழித்ததாக எஃப்.ஐ.ஆர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்