மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மது குடிக்க பணம் தராததால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்.!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் வசித்து வருபவர் மொய்னுதீன் அன்சாரி. இவருக்கு பர்வீன் என்ற மனைவி இருந்துள்ளார். இதில் அன்சாரி கடந்த சில மாதங்களாக மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில், குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் தினமும் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று அன்சாரி மது குடிக்க தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதில் பர்வீன் பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த அன்சாரி மனைவியின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடுவதற்குள் அன்சாரி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து பர்வீனை மீட்ட அக்கப்போக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய அன்சாரியை பெரிவாலி ரயில் நிலையம் அருகே கைது செய்தனர்.