#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவன் மனைவி இடையே தகராறு.. பாம்பை கடிக்க விட்டு கொன்ற கொடூரம்.!
ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பாம்பை கடிக்க விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் கணேஷ் பத்ரா-பசந்தி பத்ரா. இந்த தம்பதியினருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த அக்டோபர் ஆறாம் தேதி கணேஷ் வீட்டிற்கு பாம்பு ஒன்றை வாங்கி வந்துள்ளார். இதனை பார்த்த மனைவியை பாம்பு எதற்காக என கேட்டுள்ளார். அதற்கு கணேஷ் பூஜை ஒன்று செய்யப் போவதாகவும் அதற்காகத்தான் வாங்கி வந்தேன் என கூறியுள்ளார்.
ஆனால் அன்று இரவு தனது மனைவி மற்றும் குழந்தை தூங்கிய பிறகு அவர்கள் தொங்கும் அறைக்குள் பாம்பை கணேஷ் விட்டுள்ளார். அடுத்த நாள் காலையில் மனைவி மற்றும் குழந்தை பாம்பு கடித்து இருந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் கணேஷ் திட்டமிட்டு கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.