பெங்களூரில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம்? வெளியான அதிர்ச்சி தகவல்.!



iN Karnataka Bangalore man Arrested 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், சம்பிகேஹள்ளி, தனிசந்திரா பகுதியில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்துல் ரகுமான் என்ற 24 வயதுடைய நபர் வேலை பார்த்து வருகிறார். இவரின் ஆதார் அடையாள அட்டையை உரிமையாளர் கேட்ட நிலையில், பல காரணங்கள் கூறி ஆதாரை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 

ரகுமான் கைது

இதனிடையே, அப்துலின் ஆதாரை தேடி மற்றொரு ஊழியர் உடமையை சோதித்தபோது, கையெறிகுண்டு இருந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன்பேரில் அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டார். மார்ச் 21 இந்த விஷயம் நடைபெற்றது. 

இதையும் படிங்க: உடலுறவு வேண்டுமானால் ரூ.5000 கொடு; கணவரிடம் கெடுபிடி காண்பித்த இளம் மனைவி.. பெங்களூரில் ஷாக்.!

விசாரணை

இதுகுறித்து அப்துல் ரகுமானிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், கையெறி குண்டை தடயவியல் ஆய்வுக்கு  அனுப்பி வைத்தனர். விசாரணையில், பெங்களூரில் உள்ள அரண்மனை மைதானத்தில், நபர் ஒருவர் அப்துலிடம் குண்டு கொடுத்துள்ளார். அதனை அரண்மனையில் இருக்கும் கடையில் வைக்கச்சொல்லியுள்ளார். 

சதித்திட்டம்?

இதேபோல, நகரின் பல இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த சதி நடந்துள்ளதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவர் கொடுத்த தகவலின்பேரில் ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தீராத வயிற்றுவலி; திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் விபரீதம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!