மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் உடையில்... பிரபல ரவுடி சுட்டுக்கொலை... எங்கே ஜனநாயகம் என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி.?
உத்திர பிரதேசம் மாநிலத்தில் நீதிமன்ற வளாகத்திற்குள் பிரபல ரவுடி சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இச்சம்பவம் தொடர்பாக கொலை செய்தவர்களை கைது செய்து விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பிராம் தத் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது அன்சாரி சிறையில் உள்ளார். அவரது நண்பரும் பிரபல ரவுடியுமான சஞ்சீவ் ஜீவா என்பவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் அவரை கைது செய்த போலீஸ் லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து வந்தது அப்போது வக்கீல் உடையில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சஞ்சீவ் ஜீவாவை சுட்டுப் படுகொலை செய்தனர். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த படுகொலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்தப் படுகொலை சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இதுதான் ஜனநாயக மாயன கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் இது பற்றி தொடர்ந்து பேசிய அவர் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது முக்கியம் இல்ல ஆனால் கொலை நடந்திருக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் காவல்துறையினரின் முதல் விசாரணையில் வக்கீல் உடை அணிந்து வந்த நபர் துப்பாக்கியால் சுட்டதாக தெரியவந்திருக்கிறது. மேலும் கொலை குற்றவாளியை கைது செய்து விட்டதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார்.