திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சரக்கு வாங்க ரூ.100 கொடுக்காததால் ஆத்திரம்; நண்பன் அடித்தே கொலை.!
ரூ.100 க்கு நடந்த தகராறில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டுள்ள நிலையில், அவரின் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார்க் மாவட்டம், காந்தி பார்க் பகுதியில் வசித்து வருபவர் மனோஜ் குமார். இவரின் நண்பர் கங்கா ராம் (வயது 28). இருவரும் மதுபோதை ஆசாமிகள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 16 ஆண்டுகளாக முடியை சாப்பிட்ட 21 வயது இளம்பெண்; அறுவை சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்த பெண்.!
ரூ.100 பணத்திற்கு வாக்குவாதம்
இதனிடையே, சம்பவத்தன்று காந்தி நகர் பகுதியில் இருவரும் இருந்துள்ளனர். அச்சமயம் சாராய பாட்டில் வாங்க ரூ.100 கொடுப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, மனோஜ் குமார் மதுபானம் வாங்க பணம் கேட்ட நிலையில், ராம் ரூ.100 பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த குமார், குழாயின் கைப்பிடியை எடுத்து ராமின் தலையில் பலமாக அடித்துள்ளார்.
நண்பர் அடித்துக்கொலை
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கங்கா ராம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கங்கா ராம் பரிதாபமாக உயிரிழந்தார். ஈந்த விஷயம் குறித்து கங்கா ராமின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர். மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த கங்கா ராம் உயிரிழந்துள்ள காரணத்தால், அவரின் குடும்பம் நிலைகுலைந்து காணப்பட்டுள்ளது. குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க: என் கூட படுக்கைக்கு வாங்க டீச்சர்.. டியூசன் போன இடத்தில் 15 வயது சிறுவன் அதிர்ச்சி செயல்.. கூண்டோடு கைது.!