நடுரோட்டில் நொடியில் வழிப்பறி.. வேடிக்கை பார்த்த மக்கள்.. பைக்கை களவாடி ஓடிய கூட்டம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!



in Uttar Pradesh Hathras BIke Stolen 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில்,ஸ் சம்பவத்தன்று தம்பதி தங்களின் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தனர். அவர்கள் நகை வாங்கச் சென்று திரும்பியதாக தெரியவருகிறது. 

வாங்கிய 300 கிராம் அளவிலான நகையை வாகனத்தின் பாதுகாப்பு பெட்டிக்குள் வைத்துவிட்டு தம்பதி பயணம் செய்தனர். அப்போது, மக்கள் கூட்டம் நிரம்பிய சாலை நடுவே வழிப்பறி செயல் நடந்தது.

இதையும் படிங்க: ஐயோ எங்களை கொல்லுறானே! நள்ளிரவில் தம்பதியின் அலறல்.. தலைதெறிக்க ஓடிய மகன்.. மரண ஓலத்தால் நடுங்கிய மக்கள்.!

முன்னதாகவே கொள்ளை திட்டத்துடன் காத்திருந்த நபர்கள், தம்பதியின் மீது பெப்பர் ஸ்ப்ரே தூவிவிட்டு வாகனத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த பதறவைக்கும் சம்பவம் சில நொடிகளில் நடந்து முடிந்தது.

இந்த விஷயம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ள நிலையில், காவல் துறையினர் தம்பதி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நடுரோட்டில் கொள்ளை சம்பவம் நடந்தபோது, அதனை ஒன்றும் புரியாமல் பலரும் வேடிக்கை பார்த்தனர். மக்கள் தாமதமாக சுதாரிப்பார்கள் என்பதை புரிந்துகொண்ட கும்பல், நொடியில் பயங்கரத்தை நடத்தி தப்பிச் சென்றது.

இதையும் படிங்க: நாங்க சந்நியாசம் போறோம் - கும்பமேளாவில் துறவறம் ஏற்ற 7000 பெண்கள்.!