மீண்டும் இந்தியாவில் அமலாகிறதா ஊரடங்கு?.. பிரதமரின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டம்.!
கொரோனா பரவலின் தீவிரத்தை பொறுத்தே ஊரடங்கு என்பதால், அவை தற்போதைக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், கொரோனா அதிகரித்தால் கட்டாயம் அவ்விதமான சூழ்நிலையையும் நாம் எதிர்கொள்ள நேரிடும்.
இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கொரோனா ஆலசோனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
பல மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசை அறிவுறுத்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
அதேபோல, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அல்லது முகக்கவசம், தனிமனித இடைவெளி தொடர்பான விவாதங்களும் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் குறைந்து இருந்த கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.
கொரோனா கடுமையான அளவு அதிகரித்தால் மட்டுமே ஊரடங்கு விதிக்கப்படலாம் என்பதால், தற்போதைக்கு அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் தெரியவருகிறது.